அமெரிக்காவின் அரிய மரபுச் செல்வமாகத் திகழும் கிசிங்கரின் அறிவுத்திறமை
2023-12-01 14:57:37

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹென்றி கிசிங்கர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அந்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற தூதாண்மை வல்லுநராகத் திகழ்ந்தாராக கருதப்படுகின்றது. சீன-அமெரிக்க தூதாண்மை தொடர்புகளை விரைவுபடுத்துவது, மத்திய கிழக்கில் முயற்சி எடுப்பது போன்றவற்றில்  தலைசிறந்த பங்காற்றினார். உண்மையான தூதாண்மை சார் அறிவுத்திறமை கொண்டிருத்தல் என்பது உலகத்தின் அமைதிக்கும் நிதானத்திற்கும் ஆக்கப்பூர்வமாக செல்வாக்கைக் கொண்டு வரும் என்பதற்கான சான்றாகவும் அவர் விளங்கினார்.

கிசிங்கரின் தூதாண்மை அறிவுத்திறமை என்பது, உலக வரலாறு பற்றிய அவரது ஆழமான புரிதலின் அடிப்படையில் சர்வதேச உறவு விதிமுறைகளை துல்லியமாகப் பயன்படுத்தி உருவாக்கிய ஒன்றாகும்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே தூதாண்மை உறவை நிறுவி  முன்னேற்றுவதில் பனிக்கட்டிகளை உடைப்பது போன்ற பயணத்தை மேற்கொண்டார். இது, அவரின் தூதாண்மை கால சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகின்றது.

1971ஆம் ஆண்டு, அவர் சீனாவில் மேற்கொண்ட இரகசியப் பயணத்தின் வழி 1972ஆம் ஆண்டில், அமெரிக்க அரசுத் தலைவர் நிக்சன் சீனாவில் பயணம் மேற்கொள்ள உதவினார்.  அதன்பின்  கடந்த 50 ஆண்டுகளில், 100க்கும் மேலான முறை, கிசிங்கர் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வாண்டின் ஜூலை திங்களில் 100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய கிசிங்கருடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங் மாநகரில் சந்திப்பு நடத்தினார்.

சீன-அமெரிக்க உறவு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில், கிசிங்கர் போன்றவர்களின் பங்களிப்பு அமெரிக்காவுக்குத் தேவை. அமெரிக்காவின் உள்நாட்டின் அரசியல் துருவமுனைப்பைச் சமாளித்து, சீனாவின் வரலாறு மற்றும் பண்பாட்டைப் புரிந்துணர்ந்து, இரு நாடுகளின் பொது நலன்களை புறநிலையாக கருத்தில் கொள்ளும்  திறன் கொண்ட அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கு தேவை. சீனா மீதான சரியான புரிதலை கையாண்டு, இரு தரப்புறவுகளுக்கிடையில் இன்னல்களைச் சமாளித்து, இரு தரப்புறவு முன்னேறி செல்ல அமெரிக்கா பாடுபட வேண்டும்.