© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேக்கத்தின் கலைப்பொருள்களை கிரேக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிரேக்கம் சமீபத்தில் வலியுறுத்தியது உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தியது. பிரிட்டனின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வெவ்வேறு நாடுகளில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட கலைப்பொருள்கள் பிரிட்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை உரிய தரப்பிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சீனாவின் சிஜிடிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில் 90 விழுக்காட்டுக்கும் மேலானோர் தெரிவித்துள்ளனர். கிரேக்கத்தைத் தவிர, நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து, சிலி உள்ளிட்ட பல நாடுகள் இதே கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 1963இல் நிறைவேற்றப்பட்ட பிரிட்டன் அருங்காட்சியகச் சட்டத்தைக் காரணம் காட்டி, கலைப்பொருள்களைத் திரும்ப ஒப்படைக்க பிரிட்டன் மறுத்து வருகிறது. இது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்ட விரோதமானது என்று 91.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள கலைப்பொருள்களின் பாதுகாப்பு பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் சுமார் 2 ஆயிரம் கலைப்பொருள்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவற்றில் சில இணையத்தில் விற்பனைக்கு வந்தன. இது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று 88 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். கொள்ளை அடித்து செல்லப்பட்ட கலைப் பொருள்களின் பாதுகாப்பிடமாக சில ஐரோப்பிய நாடுகள் விளங்குவதாக 91 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.