சர்வதேச கடல்சார் அமைப்பின் ஏ நிலை உறுப்பு நாடாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்ட்ட சீனா
2023-12-02 17:50:50

சர்வதேச கடல்சார் அமைப்பின் 33ஆவது பேரவை டிசம்பர் முதல் நாள் லண்டனில் நடத்திய புதிய உறுப்பு நாடுகள் தேர்வில், சீனா அதிக வாக்குகளுடன் மீண்டும் ஏ நிலை உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டிலிருந்து சீனா 18ஆவது முறை இவ்வமைப்பின் ஏ நிலை உறுப்பு நாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவைத் தவிர, கிரேக்கம், இத்தாலி, ஜப்பான், நார்வே, பனாமா, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா, லைபிரியா ஆகிய நாடுகளும் ஏ நிலை உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைமைச் செயலாளர் பேட்டியளிக்கையில், இடர்காப்பு முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் பிரதிநிதித்துவம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், சர்வதேச கடல்சார் அமைப்பின் பணிக்கு, குறிப்பாக காலநிலை மாற்றச் சமாளிப்புத் துறைக்கு சீனா மிக முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.