ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் பிரேசில்
2023-12-02 16:35:41

ஜி20 அமைப்பின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியை, பிரேசில் டிசம்பர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக வகிக்கத் தொடங்கியது. ஓராண்டு பதவிக்காலத்தில், பட்டினி, வறுமை மற்றும் சமமின்மைக்கு எதிரான போராட்டம், தொடரவல்ல வளர்ச்சி, உலக நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய 3 மைய கருப்பொருட்களின் கீழ் பணிபுரிவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரேசில் வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் நாட்டின் சுமார் 15 நகரங்களில், அமைச்சர் நிலை கூட்டங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வக் கூட்டங்களை பிரேசில் நடத்த உள்ளது. ஜி20 தலைவர்களின் உச்சிமாநாடு 2024ஆம் ஆண்டு நவம்பர் 18, 19 ஆகிய நாட்களில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ளது.