காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் டிங் சுயேசியாங் உரை
2023-12-02 16:32:53

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனத் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங், நவம்பர் 30 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை துபையில் நடைபெற்ற உலக காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

8 ஆண்டுகளுக்கு முன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மிகப்பெரிய மன உறுதி மற்றும் ஞானத்துடன் பாரிஸ் உடன்படிகையை உருவாக்கி, காலநிலை மாற்றச் சமாளிப்புக்கான புதிய உலகளாவிய ஒத்துழைப்பைத் தொடங்கினார். வாக்குறுதியைப் பின்பற்றி வரும் சீனா உலக காலநிலை மாற்ற மேளாண்மைக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. பசுமை வளர்ச்சி, எரியாற்றல் புரட்சி, காலநிலை மாற்ற சமாளிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னேற்றி வரும் சீனா, பரந்த வளரும் நாடுகள் காலநிலை மாற்றச் சமாளிப்புத் திறனை உயர்த்துவதற்கு ஆதரவளிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நிலையில் பல்வேறு தரப்புகள் ஒத்துழைப்புக்கான மன உறுதி மற்றும் திறனை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் கட்டுமானம் ஆகிய துறைகளில், வளரும் நாடுகளுக்கான ஆதரவுகளை வளர்ந்த நாடுகள் அதிகரித்து, செயல்களின் மூலம் விருப்பத்தை உண்மையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இம்மாநாட்டின்போது, ஐக்கிய அரபு அமீரகம், ஜாம்பியா, கியூபா, மாலத்தீவு ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களையும், ஐ.நா. தலைமைச் செயலாளரையும் டிங் சுயேசியாங் சந்தித்துப் பேசினார்.