காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் படை மீண்டும் தொடங்கிய வான் தாக்குதலில் 178 சாவு
2023-12-02 17:03:41

பாலஸ்தீனத்தின் காசா பிரதேச சுகாதார அமைச்சகம் டிசம்பர் முதல் நாளிரவு வெளியிட்ட அறிக்கையின்படி, காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் படை அன்று மீண்டும் தொடங்கிய வான் தாக்குதலில் குறைந்தது 178 பேர் உயிரிழந்தனர். 589 பேர் காயமுற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மகளிர் மற்றும் குழந்தைகளாவர். பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகை அதேநாள் வெளியிட்ட அறிக்கையில் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.