அமெரிக்க-சீன உறவுக்கான ஜார்ஜ் புஷ் நிதியத்தின் தலைவர் சி.எம்.ஜிக்கு அளித்த பேட்டி
2023-12-02 16:58:55

அமெரிக்க-சீன உறவுக்கான ஜார்ஜ் புஷ் நிதியத்தின் தலைவர் நீல் புஷ், சீனாவைப் புரிந்து கொள்ளுதல் என்னும் சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

சீனாவின் அமைப்புமுறையின் மேம்பாடுகளை ஆழமாகப் புரிந்து கொள்வது, சீனாவைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய அடிப்படையாகும். இணையத் தொழில் நுட்பம், தூய்மை எரியாற்றல் உள்ளிட்ட பல துறைகளில் சீனா முன்னணியில் இருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் மனித குலத்துக்கு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.