© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
காலநிலை மாற்றத்துக்கான ஜி77 நாடுகள் மற்றும் சீனத் தலைவர்களின் உச்சிமாநாடு டிசம்பர் 2ஆம் நாள் துபையில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுயேசியாங் இதில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், உலகத்தில் மிகப் பெரிய வளரும் நாடான சீனா, பரந்த வளரும் நாடுகளுடன் கூட்டாக முன்னேறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கார்பன் வெளியேற்ற உச்ச நிலை மற்றும் கார்பன் நடுநிலை ஆகிய இலக்குகளை சீனா ஆக்கமுடன் செயல்படுத்தி, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் வளரும் நாடுகளுக்கு உதவியளித்து வருகிறது. மேலும், காலநிலை மாற்றத்துக்கான தெற்கு தெற்கு ஒத்துழைப்பையும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பசுமையான கட்டுமானத்தையும் சீனா பயன்தரும் முறையில் முன்னேற்றி வருகிறது. வளரும் நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, கரி குறைந்த மற்றும் பசுமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், நமீபியா அரசுத் தலைவர், cop28 தலைவர், அமெரிக்காவின் பில் & மெலிண்டா கேட்ஸ் நிதியத்தின் தலைவர் ஆகியோருடன் டிங் சுயேசியாங் அதேநாள் சந்திப்பு நடத்தினார்.