சர்வதேச உறவுக்கு புதிய சகாப்தத்தைத் திறக்க வேண்டும்:அறிஞர் கருத்து
2023-12-03 17:56:10

சீனத் தேசிய புத்தாக்க மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு ஆய்வகத்தின் துணைத் தலைவர் ஹுவாங் ரென்வெய், சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கர், ஒரு சகாப்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் மரணமடைந்த போதிலும், இந்த சகாப்தம் அவருடன் முடிவடையவில்லை. அவரைத் தொடர்ந்து சர்வதேச உறவுக்கு புதிய சகாப்தத்தைத் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனாவைப் புரிந்து கொள்ளுதல் எனும் சர்வதேசக் கூட்டம் டிசம்பர் 2, 3 ஆகிய நாட்களில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிஸ்ஸிங்கரை பலர் தங்களின் உரையில் நினைவுகூர்ந்தனர். உலக அமைதியில் எப்போதும் கவனம் செலுத்தும் கிஸ்ஸிங்கர், நெடுநோக்கு பார்வையுடன் கூடிய உலகத் தலைமை ஆற்றலை எதிர்பார்த்தார். அவர் சொன்னது போல், பிரச்சினைகள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், திறப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுமுறையைக் கண்டறிய முடியும் என்று ஹுவாங் ரென்வெய் தெரிவித்தார்.