திட்டமிட்ட இலக்குகளை நிறைவேற்றிய வினியோக சங்கிலி பொருட்காட்சி
2023-12-03 17:34:48

முதலாவது சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி டிசம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவுற்றது. கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, இப்பொருட்காட்சியில், 15 ஆயிரம் கோடி யுவானுக்கு அதிக மதிப்புள்ள 200க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் மற்றும் ஆரம்பக் கட்ட ஒப்பந்தங்கள்  கையொப்பமாகின.

உலகளவில் வினியோக சங்கிலியை கருப்பொருளாகக் கொண்ட முதலாவது தேசிய நிலை கண்காட்சியாகத் திகழும் இப்பொருட்காட்சியில், 515 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கெடுத்தன. அதனைப் பார்வையிட்ட மக்கள் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 30 ஆயிரமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு முதலாவது சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி மேடையை உருவாக்கியுள்ளது. தொழில் மற்றும் வினியோக சங்கிலிகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை இப்பொருட்காட்சி பயனுள்ள முறையில் ஊக்குவித்துள்ளதாக 83.2 விழுக்காட்டு காட்சியாளர்கள் தெரிவித்தனர்.