2023ஆம் ஆண்டின் இம்பீரியல் ஸ்பிரிங்ஸ் சர்வதேச மன்றக்கூட்டத்தில் ஹான்ட்செங் உரை
2023-12-04 16:43:14

2023ஆம் ஆண்டின் இம்பீரியல் ஸ்பிரிங்ஸ் சர்வதேச மன்றக்கூட்டம் டிசம்பர் 4ஆம் நாள் குவாங்சோ நகரில் துவங்கியது. சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்ட்செங் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், பலதரப்புவாதத்தின் முக்கியத்துவத்தை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆழமாக விளக்கிக்கூறி, உண்மையான பலதரப்புவாதத்தை நாம் பேணிக்காத்து செயல்படுத்துவதற்கு வழிகாட்டியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில், பலதரப்புவாதத்தின் மைய மதிப்பு மற்றும் அடிப்படைக் கோட்பாட்டில் நாம் மேலும் ஊன்றி நின்று, விரிவான ஆலோசனை, கூட்டுப் பங்களிப்பு, பயன்களின் பகிர்வு ஆகியவற்றைக் கொண்ட உலக மேலாண்மை சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

40க்கும் மேலான நாடுகளின் முன்னாள் அரசியல் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் இம்மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பலதரப்புவாதம் குறித்து ஆழமாக விவாதம் நடத்தினர்.