24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு
2023-12-04 16:10:27

சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்பு ஒப்புக்கொண்டது போல, 24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா சுவன் யீங் 4ஆம் நாள் தெரிவித்தார்.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சந்திப்பு நடத்தவுள்ளார் என்றும், சீனத் தலைமையமைச்சர் லீ ஜியாங், ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவர் மைக்கேல், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர், இவ்வுச்சி மாநாட்டுக்குத் தலைமைத் தாங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.