பாரிஸில் கத்தித் தாக்குதலில் ஐயத்துக்குரியவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது விசுவாசம் விடியோ பதிவு
2023-12-04 12:41:24

முதற்கட்ட விசாரணையின்படி, பாரிஸில் 2ஆம் நாள் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகச்  சந்தேகிக்கப்படும் ஒருவர் முன்னாதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது விசுவாசம் கொண்டிருக்கும் வகையிலான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புக்குப் பொறுப்பேற்றுள்ள பாரிஸின் வழக்கறிஞர் ஒருவர் டிசம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.

டிசம்பர் 2ஆம் நாளிரவு பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஈஃபிள் கோபுரத்துக்கு அருகில் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஜெர்மனியைச் சேர்ந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். 2பேர் காயமடைந்தனர். அதன்பின், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதான பிரெஞ்சு நபர் ஒருவரைக் காவற்துறை உடனடியாகக் கைது செய்துள்ளது.