சீனா-சிங்கப்பூர் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு இயங்குமுறை கூட்டம்
2023-12-04 17:21:26

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங்கின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூரின் துணைத் தலைமை அமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான லாரன்ஸ் வோங் டிசம்பர் 5 முதல் 8ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 4ஆம் நாள் தெரிவித்தார்.

மேலும், இருதரப்பு ஒத்துழைப்புக்கான சீன-சிங்கப்பூர் கூட்டு கவுன்சிலின் 19ஆவது கூட்டம், சீன-சிங்கப்பூர் சூசோ தொழில் பூங்காவின் கூட்டு வழிகாட்டல் குழுவின் 24ஆவது கூட்டம், சீன-சிங்கப்பூர் தியன்ஜின் சூழலியல் நகரத்தின் கூட்டு வழிகாட்டல் குழுவின் 15ஆவது கூட்டம், சீன-சிங்கப்பூர்(சோங்சிங்)நெடுநோக்கு இணைப்புக்கான செயல்விளக்க திட்டப்பணியின் கூட்டு வழிகாட்டல் குழுவின் 7ஆவது கூட்டம் ஆகியவற்றுக்கு அவர்கள் டிசம்பர் 7ஆம் நாள் தியன்ஜின் மாநகரில் கூட்டாகக் தலைமை தாங்குவர்.