மாற்றுத்திறனாளிகள் குணமடைதலுக்கான சேவை சீனாவில் அதிகரிப்பு
2023-12-04 16:13:55

சீனாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சம்மேளனம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு முதல், சீனாவில் குணமடைதலுக்கான சேவையை அனுபவித்துள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 69 இலட்சத்து 17 ஆயிரமாகும். தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான சுய உதவியையும்  ஒருவருக்கு ஒருவர் குணமடைதலுக்கான சேவையையும் சீனா முயற்சியுடன் மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கை,  மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையையும்  தற்சார்பு வாழ்வுக்கான ஆற்றலையும் கொண்டு வரும்.

புதிய தரவுகளின்படி, தற்போது, சீனாவில் குணமடைதலுக்கான சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கு மேலாகும். சீனாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சம்மேளனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில், சீனாவின் பல்வேறு மாநிலங்கள், மாநகரங்கள், மாவட்டங்கள் முதலியவற்றில் குறைந்த பட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு அடிப்படை தளத்தை உருவாக்கி, தொடர்புடைய சேவையை வினியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.