ஜி 20 நாடுகள் குழுவின் நடப்புத் தலைவராகப் பதவியேற்ற பிரேசில்
2023-12-04 11:21:15

ஜி 20 நாடுகள் குழுவின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான பிரேசில் டிசம்பர் முதல் நாள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றது.

தங்களின் ஓராண்டு பதவிக்காலத்தில், பசி, வறுமை மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவது, தொடரவல்ல வளர்ச்சி, உலகளாவிய ஆட்சிமுறை சீர்திருத்தம் ஆகிய மூன்று மையத் கருப்பொருட்களைச் சுற்றி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரேசில் அரசு தெரிவித்தது.

அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதிலும் உள்ள 15 நகரங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டங்களைப் பிரேசில் நடத்தவுள்ளது. அதோடு, தலைவர்களின் உச்சி மாநாடு 2024ஆம் ஆண்டின் நவம்பர் 18ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.