உலக மனித உரிமை துறையின் வளர்ச்சிக்கு மாதிரியாகச் செயல்படும் சீனா
2023-12-04 19:23:13

டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகும். இதை முன்னிட்டு, மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கை வெளியிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கையின் எழுச்சி, மனித உரிமைகளின் வளர்ச்சியில் சீனாவின் அனுபவங்கள், தற்போது உலக மனித உரிமைகளின் வளர்ச்சிப் போக்கு மற்றும் சவால்கள் உள்ளிட்டவை பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 70க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் விவாதம் நடத்தினர்.

நாட்டின் ஆட்சிமுறையில் மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பதை முக்கியப் பணியாகக் கொண்டு, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீனா சேர்த்துள்ளது. வறுமை ஒழிப்பிலும், கல்வி, சமூகக் காப்புறுதி மற்றும் மருத்துவ சுகாதார அமைப்புமுறை கட்டுமானத்திலும் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ள சீனா, முழு போக்கு ஜனநாயகத்தை தொடர்ந்து வளர்த்து, மனித உரிமைகளுக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை முழுமைப்படுத்தி, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கியுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், உலக மனித உரிமைகள் நிர்வாகத்தில் ஆக்கமுடன் பங்கெடுக்கும் சீனா, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் உலக மனித உரிமைகள் வளர்ச்சிக்கு சீனத் தனிச்சிறப்புடைய மாதிரியை வழங்குவதோடு, நெருக்கடியைச் சந்திக்கும் தற்போதைய உலகில் மனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆற்றலையும் ஊட்டியுள்ளது.