© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சின்ஜியாங் தாராள வர்த்தக மண்டலத்தின் ஹோர்கொஸ் பகுதியின் திறப்பு விழா டிசம்பர் 5ஆம் நாள் அங்குள்ள 6ஆவது தலைமுறை தேசிய வாயிலில் நடைபெற்றது. அப்போது, 26 தொழில் நிறுவனங்கள், 2095 கோடி யுவான் மதிப்புள்ள முதல் தொகுதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இதனிடையே, ஹோர்கொஸ் பகுதியின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதம், சீன (சின்ஜியாங்) தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் ஹோர்கொஸ் பகுதிக்கான அமைப்புமுறைசார் புத்தாக்க நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
16.58 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய ஹோர்கொஸ் பகுதி, சீன (சின்ஜியாங்) தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் ஒட்டுமொத்த திட்டத்தின்படி, எல்லை கடந்த சரக்குப் போக்குவரத்து, எல்லை கடந்த சுற்றுலா, நிதிச் சேவை, கண்காட்சி உள்ளிட்ட நவீன சேவைத் துறைகளுக்கு முக்கியமாக வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும். மேலும், தனிச்சிறப்பான மருத்துவம், மின்னணு தகவல், புதிய மூலப் பொருட்கள் முதலிய தொழில்களை அது வலுப்படுத்துவதோடு, எல்லை கடந்த பொருளாதார மற்றும் வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்புக்குப் புதிய மாதிரியையும் உருவாக்கும்.