பிலிப்பைன்ஸ் குண்டு வெடிப்பில் ஐயத்துக்குரிய 2 பேருக்கு விசாரணை
2023-12-05 14:26:17

பிலிப்பைன்ஸ் மிண்டானோ மாநில பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 3ஆம் நாள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  இக்குண்டு வெடிப்பில் ஐயத்துக்குரிய 2 பேர் கண்டறியப்பட்டு, தொடர்புடைய விசாரணை பணி தொடர்கின்றது என்றும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு துறை 4ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

தெற்கு பிலிப்பைன்ஸ் அமைந்துள்ள மராவி நகரின் மிண்டானோ மாநில பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் 3ஆம் நாள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

சமீபத்தில், அந்நாட்டில் தீவிரவாத அமைப்புகள் மீது இராணுவப் படை இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இக்குண்டு வெடிப்பு இதற்கு பழிவாங்கல் தாக்குதலாகும் என்று அந்நாட்டின் ஆயுதப் படை தலைமை அதிகாரி ரோமியோ பிரவுனர் தெரிவித்தார்.