சிறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம்: இலங்கை
2023-12-05 11:23:39

இலங்கையில் உள்ள சிறிய நிதி நிறுவனங்களை(மைக்ரோஃபைனான்ஸ்) ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரும் திட்டத்தை அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜப்கசே 4ஆம் நாள் திங்கள்கிழமையன்று வெளியிட்டார்.

ஏராளமான சிறிய நிதி நிறுவனங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி ஒழுங்குமுறையில்லாமல் பெருகி வருரிகின்றன. இது, கடும் கவலையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். எனவே, இந்த சிறிய நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் விதம், மத்திய வங்கியில் இருந்து தனித்தனி ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை நிறுவுவது அவசர தேவை என்றும் ராஜப்கசே குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் சுமார் 11ஆயிரம் சிறிய நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 5 நிறுவனங்களே மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் நிதித்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.