மாலத்தீவிலிருந்து ராணுவ படையை வெளியேற்றுவது குறித்து இந்தியா-மாலத்தீவு இடை உடன்படிக்கை
2023-12-05 13:52:15

மாலத்தீவிலிருந்து இந்தியா ராணுவப் படையை வெளியேற்றுவது குறித்து இந்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதற்குப் பின், இரு தரப்புக்கிடையே உடன்பாடு உருவாகியுள்ளதாக மாலத்தீவு அரசுத் தலைவர் முகமது முய்சு 3ஆம் நாள் தெரிவித்தார்.  

மாலத்தீவு மக்களின் விருப்பத்தை மதித்து அந்நாட்டில்  ராணுவ வீரர்களைத் தங்கச் செய்வதைக் கைவிடுவதாக இந்திய தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ராணுவப் படையின் வெளியேற்றத்தை இந்தியா கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டுமென மாலத்தீவு விரும்புவதாக முய்சு மேலும் கூறினார்.

முகமது முய்சு நவம்பர் 17ஆம் நாள் மாலத்தீவு அரசுத் தலைவராக பதவியேற்றார். நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பேணிக்காக்க, மாலத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர் பதவி ஏற்பு விழாவில் வாக்குறுதி வழங்கினார்.