பார்வையாளர் நாடாக ஒபெக் பிளஸில் பிரேசில் இணைப்பு
2023-12-05 11:10:40

ஒபெக் எனும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு மற்றும் அதன் நட்பு நாடுகளை உள்ளடக்கிய பெட்ரோலியம் உற்பத்தி நாடுகள் குழுவான ஒபெக் பிளஸ் அமைப்பில் பிரேசில் பார்வையாளர் நாடாக இணையவுள்ளது என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 2ஆம் நாள் தெரிவித்தார். புதைபடிவ எரிபொருளுக்கு முடிவு வருவதற்கு முன்கூட்டியே ஆயத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து பெட்ரோலியம் உற்பத்தி நாடுகளுக்கு நினைவூட்டுவதோடு, ஆலோசனைகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லுலா பயணம் மேற்கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று பிரேசில் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.