சீனா தூய்மையான எரியாற்றல் துறையில் முதலிடத்தில் உள்ளது:ஐ.யி.ஏ
2023-12-05 11:28:11

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளுக்கான 28ஆவது மாநாட்டில் (காப் 28),டிசம்பர் 4ஆம் நாள், சீனா நடத்திய கூட்டம் ஒன்றில், சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் தலைவர் ஃபாத்தி பிரோல் கலந்துகொண்டார். அவர் இதில் கூறுகையில்,

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் போன்ற தூய்மையான எரியாற்றல், மின்சார வாகனத் தொழில் துறை முதலியவற்றில் அதிகமான சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ள சீனா, தூய்மையான எரியாற்றல் தொழில் சாம்பியனாக உள்ளது என்றார் அவர்.

தவிரவும், சந்தையில் தூய்மையான எரியாற்றல் சாதனங்களின் விலையைக் குறைப்பதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. இது, உலகில் பிற நாடுகள் தூய்மையான எரியாற்றலை அதிகரிப்பதற்கு துணை புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.