சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளுடன் வாங் யீ சந்திப்பு
2023-12-05 11:12:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

வாங் யீ கூறுகையில் சீனா-ஐரோப்பிய ஒன்றிய உறவில் பன்முக மீட்பு மற்றும் நிதானத்தின் நல்ல வளர்ச்சிப் போக்கு காட்டியுள்ளது. சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாகப் பாடுபட்டு, இரு தரப்புத் தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும். சீனா-ஐரோப்பிய ஒன்றிய உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை இது முன்னேற்றும் என்றார் அவர்.

ஆக்கபூர்வமான மற்றும் நிலைப்பு தன்மை வாய்ந்த ஐரோப்பிய ஒன்றிய-சீனா உறவை வளர்க்க ஐரோப்பிய ஒன்றியம் பாடுபட்டுள்ளது. சீனாவுடன் இணைந்து பரஸ்பர மரியாதையில் ஊன்றி நின்று, தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, பரஸ்பர நன்மை பயக்கும் சமம்மான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவைக் கட்டியமைக்க வேண்டும் என்று சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிக்கள் விருப்பம் தெரிவித்தனர்.