சீன மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு
2023-12-06 10:08:54

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூணுடன் டிசம்பர் 5ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

வாங் யீ கூறுகையில், சீன-பிரிட்டன் உறவின் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி இரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குப் பொருந்தியது மட்டுமல்லாமல், உலக அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான நெடுநோக்கு மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது என்றார்.

தற்போதைய உலகில் எந்த ஒரு நாடும் தனியாகவே உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்க முடியாது. பிரிட்டன் மற்றும் சீனா இடையேயான தொடர்புகளும் ஒத்துழைப்பும் இரு தரப்புகளின் நலன்களுக்குப் பொருந்தியது. சீனாவுடனான உறவை வளர்க்கப் பாடுபடுவதோடு, சீனாவுடன் பரிமாற்றத்தை நிலைநிறுத்தப் பிரிட்டன் விரும்புகின்றது என்று கேமரூண் தெரிவித்தார்.