மடகாஸ்கர் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜோலினாவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்
2023-12-06 19:16:20

மடகாஸ்கர் அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜோலினாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 5ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

சீனாவும் மடகாஸ்கரும் பாரம்பரிய நட்பு நாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளில் இருநாட்டுறவு உயர் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் இருநாட்டு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு செழிப்பான சாதனைகளைப் பெற்றுள்ளன. தத்தமது மைய நலன் மற்றும் கவனம் தொடர்பான விவகாரங்களில் இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று உறுதியான ஆதரவளித்து வருகின்றன என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார். மேலும், மடகாஸ்கர் அரசுத் தலைவருடன் இணைந்து இருநாட்டு பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றி, இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் நன்மைபுரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.