© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2023ஆம் ஆண்டில் ரஷியாவின் கவச ஆயுதங்களின் உற்பத்தி மூன்று மடங்காக உயர்ந்து, விமான சாதனங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது என்று ரஷியாவின் தலைமையமைச்சர் மிக்கைல் மிஷுஸ்டின் 5 ஆம் நாள் தெரிவித்தார்.
அன்று ரஷிய ஆயுதப் படைகளின் தேவைகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் கூட்டத்தில் அவர் கூறுகையில், கடந்த 11 மாதங்களில், ரஷியாவின் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தி, கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றும், தகவல் தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், மின்னணு போர் மற்றும் உளவு சாதனங்களின் உற்பத்தி நான்கு மடங்கிற்கு மேலாக அதிகரித்து, வாகனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.