2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி பற்றிய பண்பாட்டுப் பொருட்கள் வெளியீடு
2023-12-06 17:26:26

2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருள் மற்றும் தொடர்புடைய பண்பாட்டுப் புத்தாக்கப் பொருட்களின் வெளியீட்டு நிகழ்வு டிசம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. “ச்சென் ச்சென்” என்னும் டிராகன் உருவமான மங்களப் பொருள், வசந்த விழா கிண்ணம் உள்ளிட்ட மங்கள பண்பாட்டுப் பொருட்கள் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. சீன ஊடகக் குழுமத்தின் துணை இயக்குநர் வாங் சியாவ்ட்சென், ஹு ஜிங்ஜுன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.