சீனாவில் வணிகச் செயல்பாட்டில் 4ஆவது தலைமுறை அணு மின் நிலையம்
2023-12-06 17:29:25

உலகளவில் முதல் 4ஆவது தலைமுறை அணு மின் நிலையமாகத் திகழும் ஷிடாவ்வென் உயர்வெப்பத்தில் வாயுவினால் குளிரூட்டப்படும் அணு மின் நிலையம், 168 மனிநேரம் தொடர்ந்த செயல்பாட்டுச் சோதனையை நிறைவேற்றி, வணிகச் செயல்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது என்று சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகம் மற்றும் சீன ஹுவாநேங் குழுமம் டிசம்பர் 6ஆம் நாள் தகவல் வெளியிட்டன. முழுமையாக தற்சார்பான அறிவுசார் சொத்துரிமை கொண்ட நாட்டின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப சாதனையாகவும், சீனாவின் 4ஆவது தலைமுறை அணு மின் தொழில் நுட்பம் உலகின் முன்னிலையை எட்டியுள்ள சின்னமாகவும் இந்நிலையம் விளங்குகிறது.

சீன அணு மின் துறையின் பாதுகாப்பான வளர்ச்சியையும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தையும் மேம்படுத்துவதற்கு இந்நிலையத்தின் வணிகச் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.