பிரிட்டனின் இறுக்கமான குடிவரவு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
2023-12-06 16:15:46

இறுக்கமான குடியேற்றக் கட்டுப்பாடுகளை பிரிடன் அரசு உள்ளூர் நேரப்படி 4ஆம் நாள் அறிவித்துள்ளது. நீண்டகால விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் திறமையான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு ஊதிய வரம்பு 38ஆயிரத்து 700 பவுண்டுக்கு மேல் இருக்க வேண்டும். இது முன்பை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். வெளிநாட்டு சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்பு ஊழியர்களின் குடும்பத்தினர் பிரிட்டனுக்கு வருவது தடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், பிரிட்டனுக்கு குடியேறும் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவக் கட்டணம், ஆண்டுக்கு 1035 பவுண்டு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திட்டப்படி, அடுத்த ஆண்டின் வசந்த காலத்திலிருந்து, இப்புதிய விதிகள் செயல்படுத்தப்படும்.