காசாவில் 2ஆவது கட்ட ராணுவ நடவடிக்கை கடுமையாக இருக்கும்: இஸ்ரேல்
2023-12-06 10:54:56

ராணுவ நடவடிக்கைகளின் மூலோபாய இலக்கு குறித்து இஸ்ரேல்-அமெரிக்கா இடையே ஒத்த கருத்துக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 5ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மூலோபாய இலக்கிற்குப் பொருந்துவதோடு, அப்பாவி மக்களின் உயிரிழப்பைக் குறைக்கும் வகையில் முன்வைத்த ஆக்கப்பூர்வமான  முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவிர, இதுவரை, காசா பிரதேசத்திலுள்ள சுமார் 800 சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் ராணுவ தரப்பு அழித்துள்ளது. நிவாரணப் பொருட்களைக் கொண்ட 180 லாரிகள் காசா பிரதேசத்துக்குள் நுழைய ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நவம்பர் 18ஆம் நாளிலிருந்து காசா பிரதேசத்தில் இஸ்ரேல் தொடங்கியுள்ள 2ஆவது கட்ட ராணுவ நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.