உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 30% மேல் சீனாவின் பங்களிப்பு
2023-12-07 16:05:17

2023ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் பற்றிய மதிப்பீட்டை முறையே 5.4விழுக்காடாகவும் 5.2விழுக்காடாகவும்  சர்வதேச நாணய நிதியமும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பும் அண்மையில் உயர்த்தியுள்ளன. இதனையடுத்து, ஜேபி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, சிட்டி குழு உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களும் இவ்வாண்டுக்கான சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீட்டை 5விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளன. அது மட்டுமல்ல, இவ்வாண்டு உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனப் பங்களிப்பு விகிதம் 30விழுக்காட்டைத் தாண்டுமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை வழங்கியுள்ளன. 

தவிரவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் 41ஆயிரத்து 947 வெளிநாட்டு முதலீட்டுத் தொழில்நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 32.1விழுக்காடு அதிகமாகும். சீனாவுடன் வணிகம் செய்வது வசதியானது என்று பல பன்னாட்டுத் தொழில்நிறுவனங்கள் கருதுகின்றன. இந்த வசதிகள் நிறுவனங்களுக்கு லாபம் கொண்டு வருகிறது. உலகின் 2ஆவது பெரிய நுகர்வுச் சந்தையாகவும் முதலாவது பெரிய இணைய சில்லறை விற்பனைச் சந்தையாகவும் சீனா விளங்கியுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, கடந்த 5ஆண்டுகளில் சீனாவில் நேரடி முதலீடு மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் இலாப விகிதம் 9.1விழுக்காடாகும். இது உலகளவில் உயர்ந்த நிலையில் உள்ளது. 

இவ்வாண்டின் முதல் பத்து திங்கள்காலத்தில் சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட, குறைவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முழு உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி சூழ்நிலையிலிருந்து இக்கேள்வியைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, கடந்த ஜூலை திங்களில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டில் இருந்ததை விட, 25விழுக்காடு குறைந்தது. உலகப் பொருளாதார மீட்சி மெதுவானதாகவும் உலகின் நாடு கடந்த முதலீடு மந்தமானாதகவும் உள்ள பின்னணியில், சீனாவும் இந்தப் பாதிப்பிலிருந்து தவிர்க்க முடியாது என தெரிவித்திருந்தன.  ஆனால், இவ்வாண்டின் முதல் பத்து திங்கள்காலத்தில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட, 32.1விழுக்காடு அதிகிரித்துள்ளதைப் பார்த்தால், சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு ஈர்ப்பாற்றல் பெரியதாக இருக்கிறது என்று கருதப்படுகிறது.