மனித உரிமை கண்ணோட்டத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் சாதனைகள்
2023-12-07 19:58:11

சிறந்த உலகத்துக்கு—மனித உரிமை பார்வையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் 10 ஆண்டுகள் என்னும் அறிக்கையை சீன மனித உரிமை வளர்ச்சி நிதியமும் சின்ஹுவா செய்தி நிறுவனத்தை சேர்ந்த தேசிய உயர் சிந்தனை கிடங்கும் 7ம் நாள் கூட்டாக வெளியிட்டன.

ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை விரைவுப்படுத்தி, வளர்ச்சி மூலம் மனித உரிமையை மேம்படுத்தும் நடைமுறை வழியின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கூட்டு கட்டுமானத்தின் முன்மொழிவு, பின்தங்கிய நிலையிலுள்ள உள்கட்டமைப்புக் கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சித் தடையை நீக்க வளர்ச்சியற்ற நாடுகளுக்கு உதவியளித்து, கூட்டாளி நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றி, வளர்ச்சியுடன் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, மனித உரிமையை மேலும் சீராக பேணிகாத்து முன்னேற்றுகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

பொது மக்களின் அடிப்படை வாழ்வு, மருத்துவ மற்றும் சுகாதார நிலை மேம்பாடு, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வருமான நிலை உயர்வு, அடிப்படை வசதி கட்டுமான மேம்பாடு, கல்வி நிலை உயர்வு, பொது பண்பாட்டு கட்டுமானத்துக்கான ஆதரவு, மத பழக்கங்களுக்கான மதிப்பு, உயிரின சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்த மாதிரிகளை இவ்வறிக்கை தேர்ந்தேடுத்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் உண்மையான நலன்களை அறிமுகம் செய்துள்ளது.