இலங்கை பொருளாதார மாற்றத்துக்கு முக்கியமாகும் கொழும்பு துறைமுக நகரம்
2023-12-07 17:03:36

இலங்கை தேடி வரும் பொருளாதார மாற்றத்தை முன்னேற்றுவதற்கு கொழும்பு துறைமுக நகரம் பெரும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே புதன்கிழமை தெரிவித்தார்.

அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களை சிறப்பம்சமாகக் கொண்ட வணிக மையமாக கொழும்பு துறைமுக நகரம் மாற வாய்ப்புள்ளதாகவும், இத்துறைமுக நகரம் 1500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீட்டை ஈர்க்கும் என சர்வதேச கணக்கீட்டு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையிலுள்ள உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு சீனா வசதியளித்து, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.