ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
2023-12-07 15:09:34

24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கெடுக்க சீனாவுக்கு வருகை புரிந்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில்,

சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் வலுவடையும் நல்ல வளர்ச்சி போக்கு காணப்படுகிறது. இது, இரு தரப்புகளின் நலன்களுக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது. சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்த இரு தரப்பும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். புதிய வளர்ச்சி துவக்கப் புள்ளியில் இரு தரப்பும், பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொது நெடுநோக்கு கருத்துகளை இரு தரப்பும் உருவாக்க வேண்டும் என்றார் அவர்.