காசா பகுதியில் ராணுவமயமாக்கமின்மையை நனவாக்க வேண்டும்: இஸ்ரேல் தலைமையமைச்சர்
2023-12-07 17:05:01

ஹமாஸ் ஆயுதப்படையினர் மீதான தரை தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து விரிவாக்குவதாகவும், காசா பகுதியில் ராணுவமயமாக்கமின்மையை நனவாக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ டிசம்பர் 5ஆம் நாள் தெரிவித்தார்.

அதே நாள், காசா பகுதி மீதான இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்தும் வரை, இஸ்ரேலுடன் இணைந்து பேச்சுவார்த்தையை ஹமாஸ் நடத்தப்போவதில்லை. தவிரவும், பிணைக் கைதிகளை இஸ்ரேலுடன் ஹமாஸ் பரிமாறிக்கொள்ளப் போவதில்லை என்று ஹமாஸ் உயர் நிலை பிரதிநிதி ஒசாமா ஹம்டன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.