பெய்ஜிங்கில் லான்சாங்-மேகொங் ஒத்துழைப்புக்கான 8ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2023-12-08 16:40:34

லான்சாங்-மேகொங் ஒத்துழைப்புக்கான 8ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மியன்மாரின் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான தான் ஸ்வே ஆகியோர் இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

வாங் யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை மற்றும் உள்ளடக்கம் வாய்ந்த தூதாண்மை கொள்கையைத் சீனா உறுதியாகச் செயல்படுத்தி, மேகொங் நாடுகளுடன் இணைந்து, பொது எதிர்காலத்துடன் கூடிய லான்சாங்-மேகொங் சமூகத்தையும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்புக்கான முன்மாதிரியையும், உலக வளர்ச்சி முன்னெடுப்பு, உலக பாதுகாப்பு முன்னெடுப்பு மற்றும் உலக நாகரிக முன்னெடுப்புக்கான முன்னோடியையும் கட்டமைக்கும் என்று தெரிவித்தார். மேலும், அடுத்த கட்டத்தில் முக்கியமாக முன்னேற்ற வேண்டிய பணிகள் பற்றி வாங் யீ முன்மொழிவுகளை வழங்கினார்.

லான்சாங்-மேகொங் ஒத்துழைப்பின் முன்னேற்றங்களைப் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் வெகுவாகப் பாராட்டியதோடு, இந்த முன்மொழிவுகளுக்கும் ஒப்புக் கொண்டனர்.