சீன-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்படிக்கையை தீ மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆவணம்
2023-12-08 15:33:12

சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் தாராள வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆவணம் அண்மையில் கையொப்பமிட்டப்பட்டுள்ளது.

இது, சீன-சிங்கப்பூர் பொருளாதார வர்த்தக உறவுக்கான புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இது, இரு நாடுகளின் சேவை வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றலை மேலும் தீவிரமாக்கும். இரு நாட்டு தொழில் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று சந்தையில் பங்கெடுப்பதற்குரிய வலிமையான அமைப்புமுறை உத்திரவாதத்தையும் இது வழங்கும்.