© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2023ஆம் ஆண்டு நவம்பர் 30முதல் டிசம்பர் 12ஆம் நாள் வரை காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் பங்கேற்கும் தரப்புகளின் 28ஆவது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டில் பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்கம் பற்றி உலகளாவிய நிலையில் ஆய்வு செய்து விவாதிக்கப்படும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதி ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றடைந்து உலகக் காலநிலை நடவடிக்கை மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, உலகக் காலநிலை நிர்வாகம் குறித்து சீனாவின் கண்ணோட்டத்தையும் முன்னெடுப்பையும் அவர் முன்வைத்தார். அவரின் ஆக்கப்பூர்வமான முயற்சியில் பாரிஸ் உடன்படிக்கை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
அப்போதைய காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் மாநாட்டின் தலைவர் லாரன்ட் ஃபேபியஸ் இதனை நினைவு கூர்கையில், சீன அரசுத் தலைவரின் பயனுள்ள ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், இந்த உடன்படிக்கையை நம்மால் உருவாக்கியிருக்க முடியாது என்றார்.
அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கைப் ஃபேபியஸ் பலமுறை சந்தித்தார். அச்சந்திப்புகள் அவரின் மனத்தில் ஆழமாக பதிந்துள்ளன. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தனிப்பட்ட பங்களிப்பு மிகவும் முக்கியம். நாடு மீதான அவரின் உணர்ச்சியும் தொலைநோக்கு வாய்ந்த பார்வையும் என் மனத்தை உருகச் செய்துள்ளன. அவரின் இத்தகைய பண்புகள் சில மேலை நாட்டுத் தலைவர்களிடம் இல்லாதவை என்று அவர் கருத்து தெரிவித்தார்.