© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2024ஆம் ஆண்டு பொருளாதாரப் பணியை ஆய்வு செய்வது, கட்சியின் நடத்தை மற்றும் ஊழல் தடுப்பு பணியை ஏற்பாடு செய்வது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை பற்றிய விதிமுறையை பரிசீலனை செய்வது ஆகியவற்றுக்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு 8ஆம் நாள் கூட்டத்தை நடத்தியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
2024ம் ஆண்டில் ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையின் தலைமையில் பொருளாதாரப் பணியை முன்னெடுத்து, புதிய வளர்ச்சி அமைப்பை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். அதோடு, சீர்திருத்தம் மற்றும் திறப்பு அளவை ஆழமாக்கி, அறிவியல் துறையின் தற்சார்ப்பு மற்றும் தன்வலிமைப்படுத்தலை முன்னெடுத்து, ஒட்டுமொத்த சரிப்படுத்தலின் அளவை விரிவாக்கி, நகரமயமாத்தையும் கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவதையும் ஒன்றிணைத்து, பயன்தரும் முறையில் பொருளாதார உயிராற்றலை அதிகரிக்க வேண்டும். இவற்றின் மூலம், பொது மக்களுக்கு நலன் தந்து, சமூக நிதானத்தை நிலைநிறுத்தி, நாட்டின் ஆக்கப்பணியையும் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி இலட்சியத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.