24 ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு
2023-12-08 11:06:01

பெய்ஜிங்கில் டிசம்பர் 7 ஆம் நாள் நடைபெற்ற 24 ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டுக்கு ஐரோப்பிய அவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் லேயன் ஆகியோருடன் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கூட்டாகத் தலைமை தாங்கினார்.

லீ ச்சியாங் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இரு தரப்புகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு அளவை மேலும் விரிவாக்கி, பசுமை கூட்டாளி உறவை ஆழமாக்கி, டிஜிட்டல் கூட்டாளி உறவை ஆக்கப்பூர்வமாகக் கட்டியமைத்து, மனித தொடர்பு பரிமாற்றத்தில் கவனம் செலுத்தச் சீனா விரும்புகின்றது என்றார்.

மேலும், சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிமுறைகளை மீறுவதையும் பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகளை அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுடன் இணைப்பதையும் சீனா எதிர்க்கிறது எனக் குறிப்பிட்ட அவர். கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரக் கொள்கைகளையும் வர்த்தக மீட்பு நடவடிக்கைகளையும் ஐரோப்பிய தரப்பு விழிப்புடன் வெளியிட்டு, வர்த்தக மற்றும் முதலீட்டுச் சந்தையின் திறப்பை நிலைநிறுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

மைக்கேல் மற்றும் லேயன் கூறுகையில், சீனாவின் நம்பகமான கூட்டணியாக ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட விரும்புகின்றது என்றனர்.

 ஐரோப்பிய ஒன்றியம் நெடுநோக்குச் சுயாட்சியைக் கடைபிடிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், சீனாவுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவும், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும், தப்பெண்ணங்களைக் குறைக்கவும்,  பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், விவசாயம், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் விரும்புவதாகத் தெரிவித்தனர். மேலும், சீனாவுடன் கையோடு கைகோர்த்து உலகளாவிய சவால்களைக் சமாளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.