சேவைத் துறையைத் தாண்டிய இந்திய பொருட்களின் ஏற்றுமதி
2023-12-08 15:06:17

இந்தியாவின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி சேவைத் துறையின் ஏற்றுமதியைத் தாண்டியுள்ளதாக இந்திய அரசு 7ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், கடந்த நிதியாண்டின் ஏற்றுமதித் தொகை 76 ஆயிரத்து 200கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அதில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 45 ஆயிரத்து 300கோடி டாலரை வகித்துள்ளது என்றார்.

மேலும், மின்னணு பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் ஏற்றுமதித் தொகை 1100 கோடி டாலராக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,  செல்லிடப்பேசிகளின் ஏற்றுமதித் தொகையும் 1100 கோடி டாலரை எட்டியுள்ளது என்றார்.