அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல்
2023-12-09 16:35:28

ஈராக் தலைநகர் பாக்தாதின் க்ரீன் சோனிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அந்நாட்டு மேற்குப் பகுதியிலுள்ள அமெரிக்க வான் படை தளம் ஆகியவை 8ஆம் நாள் தாக்கப்பட்டன. இது குறித்து ஈராக்கின் முன்னாள் வான் படை அதிகாரி எஹ்மெத் ஷேரிஃ சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்தபேட்டியில்,

அண்மையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் தாக்கப்பட்டது, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்ததுடன் தொடர்புடையது என்றார்.

ஈராக் அரசு, அமெரிக்காவுடன் எட்டியுள்ள உடன்படிக்கையில், ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் நலனைப் பேணிக்காப்பது தொடர்பான அம்சங்கள் உள்ளன. கடந்த ஓராண்டு காலமாக ஈராக்கின் பல்வேறு குடிமக்கள் படைகள் இவ்வுடன்படிக்கையைப் பின்பற்றி வருகின்றன. அமெரிக்கா தனது கொள்கையை மாற்றியதை அறிந்துகொண்ட இப்படைகள், அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தின என்று அவர் தெரிவித்தார்.