புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் சீனாவின் பங்கு
2023-12-09 17:31:45

ஐ.நா கால நிலை மாற்றம் கட்டுக்கோப்பு உடன்படிக்கை  தரப்புகளின் 28ஆவது மாநாடு அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்றது. புதுப்பிக்கவல்ல எரியாற்றலை பெருமளவில் வளர்ப்பது மற்றும் எரியாற்றல் அமைப்பு முறை முன்னேற்றத்தை நனவாக்குவது, உலகம் கால நிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய நெடுநோக்குத் திட்டமாகும். சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் கமேலா சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

கடந்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. கடலில் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி, மின்னூட்ட நிலையத்தின் ஆக்கப்பணி ஆகிய துறைகளில் சீனா நிறைய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இதைத் தவிர்த்து, சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தித் துறையில், பெருமளவு முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. முன்னேற்றப் போக்கில் நடைபோட்டு வரும் சீனா, கார்பன் நடுநிலையை நனவாக்கும் என்பதை நம்புகிறோம் என்றார்.