பாலஸ்தீன-இஸ்ரேல் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றப்படவில்லை
2023-12-09 16:34:18

காசா பிரதேசத்தில் மனித நேய போர் நிறுத்தம் பற்றி அரபு அமீரகம் முன்வைத்த தீர்மானம், 8ம் நாள் மாலை ஐ.நா பாதுகாப்பவையின் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படவில்லை. பாதுகாப்பவையின் 15 உறுப்பு நாடுகளில் பிரிட்டன் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. எதிர்வாக்கு அளித்த அமெரிக்காவைத் தவிர, மற்ற 13 நாடுகள் அனைத்தும் ஆதரவு வாக்கு அளித்துள்ளன. ஆனால், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா, வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால், இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அன்று காலை நடைபெற்ற பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை தொடர்பான பொதுக் கூட்டத்தில், போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்று அந்நாட்டுத் துணை பிரதிநிதி வூட் தெரிவித்தார்.

ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் கூறுகையில், ஐ.நா பாதுகாப்பவையின் அனைத்து உறுப்பு நாடுகளும், பொறுப்புடன் சரியான முடிவு எடுத்து, அமைதி மற்றும் உயிர் பாதுகாப்புக்குச் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.