ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சரின் பேட்டி
2023-12-09 15:59:12

ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சர் வொல்ஃப்கங் ஷுசெல், சீனாவின் குவாங் ச்சோ நகரில் “சீனாவைப் புரிந்து கொள்ளுதல்”என்ற சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். சீனாவின் காகிதக் கத்தரிப்புக் கலை பிரியரான அவர், பாண்டா தொடர்பான ஒத்துழைப்பை முன்னெடுத்ததோடு, சீனாவை, தனது அதிர்ஷட இடமாகவும் கருதுகிறார். 2வது உலகப் போர் பாதிப்பிற்கு மத்தியில் வளர்ந்த அவர், அமைதிக்கு மதிப்பளித்து, பல துருவமயமாக்க உலகத்தை உருவாக்க விரும்புகிறார்.

அவர் கூறுகையில், சீனாவும், ஐரோப்பாவும், தொடர்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக, இணைந்து ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். உலகமயமாக்கப் போக்கு, பல்வேறு நாடுகளுக்கு நலன் தரும். நீண்ட கால திட்டத்தை வகுத்து, திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து வரும் சீனா, மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது. அதனால், சீனாவுடன் தொடர்பு கொள்வது, அந்நாட்டைப் புரிந்து கொள்வதற்கான மிக முக்கிய வழிமுறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.