தியோயூ தீவு கடற்பரப்பில் நுழைந்த ஜப்பானிய கப்பல்களை விரட்டியது சீனா
2023-12-10 17:23:56

டிசம்பர் 9ம் நாள் ஜப்பானின் சுருமரு என்ற கப்பலும், சில ரோந்து கப்பல்களும், சீனாவைச் சேர்ந்த தியோயூ தீவின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தன. சீனக் கடல் காவற்துறை அவற்றைக் கட்டுப்படுத்திய பிறகு விரட்டியதாக சீனக் கடல் காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தியோயூ தீவு மற்றும் அதனைச் சேர்ந்த தீவுகள், சீனாவுக்குரியவை. சட்டத்தின்படி, சொந்த உரிமை கடற்பரப்பில் சீனா உரிமையைப் பேணிக்காத்துச் செயல்படுவது பற்றி தவறாகப் பேசும் உரிமை ஜப்பானுக்கு இல்லை. மேற்கூறிய கடற்பரப்பில் சட்டவிரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் ஜப்பான் உடனே நிறுத்த வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.