சீனாவின் ஹுவாங் யன் தீவுவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிலிப்பைன்ஸ் கப்பல்கள்
2023-12-10 18:46:37

பிலிப்பைன்ஸ் மீன் பிடிப்பு மற்றும் மீன் மூலவள பணியகத்தைச் சேர்ந்த 3 கப்பல்கள், சீனாவின் எச்சரிக்கையை மீறி, சீனாவின் ஹுவாங் யன் தீவு கடற்பரப்பில் நுழைந்தன.

சீன கடல் காவற்துறை பலமுறை எச்சரித்து, பயனில்லாததால், சட்டத்தின் படி இந்த மூன்று கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டன. ஹுவாங் யன் மற்றும் தனது அருகிலுள்ள தீவுகளின் அரசுரிமை சீனாவுக்கு உள்ளது.

சீனாவின் அரசுரிமையையும் சர்வதேச சட்டத்தையும் வரையறையையும் பிலிப்பைன்ஸ் மீறியுள்ளது. இந்த மீறல் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீன கடல் காவற்துறை வேண்டுகோள் விடுத்தது.