இலங்கையில் சுற்றுலா வருமானம் 180 கோடி டாலர்
2023-12-10 19:52:29

இலங்கையில் இவ்வாண்டின் 11 மாதங்களில் சுற்றுலா வருவாயாக 180 கோடி டாலர் கிடைத்துள்ளது என்றும் கடந்த ஆண்டை விட 78.3 விழுக்காடு அதிகம் என்று அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதில், கடந்த நவம்பரில் மட்டும் 20.53 கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் அதிகமான விமான சேவைகளுடன் மேலும் அதிகமான பயணிகள் இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்தார்.