பிலிப்பைன்ஸின் மீதான சீனாவின் எச்சரிக்கை
2023-12-10 18:50:13

டிசம்பர் 10ஆம் நாள், பிலிப்பைன்ஸின் மூன்று கப்பல்கள், சீனாவின் அனுமதியைப் பெறாத நிலைமையில், தென் சீனக் கடலிலுள்ள ரென் ஐ என்ற பாறையின் அருகிலுள்ள கடற்பரப்பில் நுழைந்தன. சீன கடல் காவற்துறை சட்டத்தின் படி இவற்றைக் கட்டுப்படுத்தியது. 6:39 மணியளவில் பிலிப்பைன்ஸின் ஒரு கப்பல், சீனாவின் எச்சரிக்கையைப் பொருப்படுத்தாமல், சர்வதேசக் கடல் வரையறையை மீறி, இயல்பாக இயங்கி வந்த சீன கப்பல் ஒன்றில் மோதியது. இந்த சம்பவத்தின் பொறுப்பு, பிலிப்பைன்ஸுக்கு உள்ளது என்று சீன கடல் காவற்துறை தெரிவித்தது.

தென் சீன கடல் தொடர்பான பல்வேறு தரப்புகளின் செயல் அறிக்கையையும் தனது வாக்குறுதியையும் பிலிப்பென்ஸ் மீறியது. இந்த மீறல் நடவடிக்கை, சீன அரசுரிமையையும் பிரதேச அமைதியையும் நிதானத்தையும் கடுமையாக சீர்குலைத்துள்ளது.

பிலிப்பென்ஸ் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ரென் ஐ பாறை உள்ளிட்ட தென் சீன கடற்பரப்பு பற்றிய அரசுரிமை சீனாவுக்கு உள்ளது. சீன கடல் காவற்துறை சீன அரசுரிமை பிரதேசத்தில் சட்டத்தின் படி செயல்படும் என்று சீன கடல் காவற்துறை தெரிவித்தது.